செயலின் விளக்கம்
அன்பார்ந்த உழவர் பெருமக்களுக்கு வணக்கம், "பயிர் செய்யும் முன்" அதாவது "பயிர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்" செயலி (Application) மூலம் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. "பயிர் செய்யும் முன் (App) செயலியை உங்களுக்காக உருவாக்கிய நோக்கம் உழவர்கள் தாங்கள் செய்யும் பயிரினால் தங்களுக்கு ஏற்படவிருக்கும் சிறிய மற்றும் பெரிய அளவிலான நஷ்டத்தை முன் கூட்டியே அறிவதற்கும், எந்தப் பயிரினைப் பயிர் செய்தால் லாபம் பெறலாம் என்று அறிவதற்கும் நாங்கள் அறிமுகமாக்கும் செயலி இது.
இன்றைய காலகட்டத்தில் பார்க்கும் பொழுது, அதாவது ("பயிர் செய்யும் முன்" செயலியின் வருகைக்கு முன்) உழவர்கள் பொதுவாகத் தாங்கள் பயிர் செய்யும் பயிரினைத் தேர்ந்தெடுக்கும் முறை, தங்கள் பகுதியின் பருவநிலை, நீர்நிலை, சுற்றியுள்ள நிலங்களில் பயிரிடப்பட்டவை என்னவென்று கணக்கில் கொண்டே நிலத்திற்குரிய பயிரைத் தேர்ந்தெடுப்பார்கள். (உங்களுடைய பகுதியையும் தாண்டி பயிரிட்டவர்களின் மற்றும் பயிர்களின் விவரங்கள் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை) இதுவே பெரும்பாலானவர்கள் பின்பற்றும் முறையாக உள்ளது. உதாரணமாக நிலக்கடலை சந்தை நன்றாக உள்ளது என்றால், பெரும்பாலான உழவர்கள் அதையே பயிரிடுவார்கள்.
பல இன்னல்களைக் கடந்து அறுவடை செய்து சந்தை செல்லும் பொழுதுதான் மற்ற உழவர்களும் அதே பயிரினைப் பயிர் செய்துள்ளனர் என்று தெரியவரும். இதனால் போதிய விலை கிடைக்காமல் போகிறது என்று, கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி உழவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இது மிகவும் முக்கியமாக உள்ளது.
இந்தப்பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் வண்ணம் இந்தப் "பயிர் செய்யும் முன்" செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் செயல்பாட்டால் உழவர்கள் பெறப் போகும் நன்மைகள் மற்றும் இந்தச் செயலி எப்படி உழவர்களுக்கு எல்லாம் உற்ற தொழில்நுட்பத் தோழனாகச் செயல்படும் என்பதை இந்தச் செயலியின் செயல்பாட்டின் மூலம் தாங்களே அறியலாம். "பயிர் செய்யும் முன்" செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் தகவல்களைத் தந்து, அதாவது உங்களின் நிலம் மற்றும் பயிர்களின் முழு விவரம் பதிவிறக்கம் செய்த சமயத்தில் பயிர் செய்து இருந்தால், அதன் பயிரிட்ட தேதி அதன் அறுவடை நாளை தோராயமாகக் கணித்துச் சொல்ல வேண்டும்.
உதாரணமாக, நிலக்கடலையைப் பயிர் செய்து இருந்தால் மேலே குறிப்பிட்டதுபோல் முழு விவரமும் தாருங்கள். இதுபோன்று ஒவ்வொரு உழவரும் தங்கள் பயிரிட்ட பயிரின் விவரங்களைத் தந்து, இந்தச் செயலியில் இணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கணக்கைத் தொடங்குவதன் மூலம், அவரவர்கள் கைப்பேசித் திரையில் "பயிர் செய்யும் முன்" செயலியைத் திறந்து பார்க்கும் பொழுது கீழ்க்கண்ட விவரங்கள் தெரியவரும்.
நான்கு திசைகளில் பயிரிட்ட பயிர்கள் நிலவரம்
10 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் வரை உள்ள பயிர் செய்த உழவர்கள் நிலவரம் அவர்களது பயிரிட்ட நிலப்பரப்பும் தெரியவரும்.
இப்படி ஒவ்வொரு உழவரும் தங்களைச் சுற்றியுள்ள பயிர்களின் விவரங்களைப் புள்ளிவிவரங்களோடு அறிந்து கொள்ளலாம். (உதாரணமாக, நிலக்கடலை 50 நபர்கள் 33 ஏக்கர் 15 செண்ட் பயிரிட்ட தேதி மற்றும் அறுவடை நாள் 12.04.2020 / 12.07.2020). இதுபோன்ற விவரத்தை நீங்கள் மனத்தில் கொண்டு உழவர்களாகியதாங்கள் அதே நிலக்கடலை பயிரைத் தேர்ந்தெடுக்காமல் மாற்றுப் பயிரினைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்வதன் மூலம் உங்களுக்கும் மற்ற உழவர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் எல்லோரும் நிச்சியமாக நல்ல மகசூல் பெற்று லாபம் ஈட்ட முடியும் என்பது உண்மை. ஆதலால் இந்தப் “பயிர் செய்யும் முன்” செயலி தங்கள் உழவ நண்பனாக உறுதுணையாக இருக்கும் வண்ணம் உருவாக்கியுள்ளோம்.
உழவர்கள் அனைவரும் கைகோர்த்து இந்தச் செயலி மூலம் உழவால் இணைந்து இந்தத் தொழில்நுட்பத் தோழனைப் பயன்படுத்தி, நன்மைகள் பல பெறும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பு ஒருவர் ஒரு அலைபேசியில் எத்தனை கணக்கை வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
வெளியூரில் உள்ள தங்களின் பிள்ளைகள் மூலமும் கணக்கைத் துவங்கலாம். இதுபோன்று மேலும் பல அம்சங்கள் உங்களை வந்து சேரும். எனவே நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்; “பயிர் செய்யும் முன்” செயலியைப் பயன்படுத்துவோம்; விவசாயம் காப்போம்; வாழ்வில் வளம் பெறுவோம். நன்றி வணக்கம் !
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
முகப்புப்பக்கத்தின் செயல்பாடுகள் முகப்பு பக்கத்தை பற்றி, முகப்பு பக்கத்தில்
காணப்படும் முதல் பகுதியானது அதாவது (முகப்புக்கு கீழே) (DISTANCE km) இந்த செயல்முறையானது நீங்கள் உங்களின் ஊரை மனதில் வைத்து நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் மண்டியை கருத்தில் வைத்து நீங்கள் பார்க்க விரும்பு ஊரை தேர்வு செய்வதன் மூலம் தேர்வு செய்த ஊரை வைத்து அந்த ஊர் வரையில் பயிர் செய்துள்ள பயிர்களின் விவரங்கள் முறையே (தோட்டக்கலை பயிர்கள்) (உணவு பயிர்கள்) (பணப்பயிர்கள்) என்ற வகையில் விவரங்கள் உங்கள் பார்வைக்கு வரும் தேர்ந்தெடுத்த தூரத்தின் படி முறையே மாவட்ட வாரியாக மற்றும் தாலுகா வாரியாக 2015-16 கணக்கெடுப்பின்படி விளைநிலங்களின் விவரங்களும் அதனுடன் சேர்த்து நமது செயலியை பயன்படுத்துவோர் விளைநிலங்களின் விவரங்களும் உங்கள் பார்வைக்கு வரக்கூடும், முகப்பு என்ற வார்த்தைக்கு வலது புறமாக இருக்கும் (E) என்று வரும் குறியானது நீங்கள் பார்க்க விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்க உதவும் ஒன்றாகும் அந்த குறி (E) ஆக இருந்து அதனை தொடுவதன் மூலம் விவரங்களை ஆங்கிலத்தில் காணலாம் அதுவே (த) என்று இருந்தால் அதனை தொடுவதன் மூலம் விவரங்களை தமிழில் காணலாம்,(நிலத்தின் வகை) என்ற பகுதியானது உங்களுக்குரிய நிலத்திற்கான விவரங்களை எந்த நேரத்திலும் மிக விரைவாக காண உதவும் வகையில் உருவானது உதாரணமாக நீங்கள் வெவ்வேறு ஊரின் விவரங்களை பார்த்து முடித்த பிறகு முறையே நிலத்தின் வகையை தேர்வு செய்வதன் மூலம் உடனடியாக உங்களுக்குரிய நிலத்தின் விவரத்தை வந்து அடையும்,(தாலுகா) என்ற பகுதியை தொடுவதன் மூலம் உங்களை சுற்றியும் அல்லது நீங்கள் தேர்வு செய்த தூரத்தின் அடிப்படையில் செயலியை பயன்படுத்துவோரின் விளைநிலங்களின் விவரங்களும் அதுமட்டுமில்லாமல் 2015 16 கணக்கெடுப்பின்படி அந்தந்த மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலான விளைநிலங்களின் விவரங்களையும் காணமுடியும் இந்த அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பயிர் விவரங்களை சேர்ப்பது எப்படி?
தங்கள் பயிர்களுக்கான பகுதிக்கு செல்லுங்கள் அங்கு (பயிர் விவரம் சேருங்கள்) தொட்டு உள் சென்று அங்கு கேட்டு இருக்கும் விவரங்களை தந்து (சேமி) என்பதை அழுத்தி பூர்த்தி செய்யுங்கள்.
பயிர் விவரங்களை திருத்துவதும் நீக்குவதும் எப்படி?
தங்கள் பயிர்களுக்கான பகுதிக்கு சென்று அங்கு தாங்கள் சேர்த்த பயிரின் விவரம் வரும் அந்த பயிரின் வலது பக்கத்தில் இருக்கும் (ஐ கானை) தொட்டு உள் நுழைய அங்கு பயிர் விவரம் திருத்த என்று வரும் அதில் உங்களுக்கேற்ப்ப திருத்திக் கொள்ளுங்கள் அதேபோல் அந்த பக்கத்தில் வலதுபுறம் மேலே இருக்கும் (ஐ கானை) தொட்டு நீக்கவும் இயலும் மற்றும் பயிர் அறுவடை ஆன பிறகு (இந்த பயிரின் அறுவடை முடிவடைந்தது) என்ற சொல்லை அழுத்தி விவரங்களை பூர்த்தி செய்யவும்.
நில விவரங்களை சேர்ப்பது எப்படி?
கணக்கு பகுதிக்கு சென்று அங்கு (நிலத்தை சேர்) தொட்டு உள் நுழைய அங்கே கேட்கும் விவரங்களை அளியுங்கள் (முக்கியமாக உங்களுக்கான நன்செய் நிலம் புன்செய் நிலம் பற்றியும் மற்றும் உங்கள் ஊரிலோ அல்லது ஊரின் அருகில் இருக்கும் பிரபலமான இடத்தை குறிக்கவும்).
நில விவரத்தை திருத்துவதும் நீக்குவதும் எப்படி?
கணக்கு பகுதியில் இருக்கும் நன்செய் புன்செய் வார்த்தைக்கு நேராக இருக்கும் (ஐ கானை) தொட்டு உள் சென்று திருத்தவும் அதே பக்கத்தில் வலது பக்க மேல் முனையில் (ஐ கானை) தொட்டு நில விவரங்களை நீக்கி விடலாம், அதேபோல் கணக்கு பகுதியில் இருக்கும் உங்கள் பெயரின் பக்கத்தில் (ஐ கானை) தொடுவதின் மூலம் நில உரிமையாளரின் விவரங்களை திருத்தி கொள்ளுங்கள்.
எனது வேளாண் பொருளை எப்படி விற்பனை செய்வது?
(உங்கள் வேளாண் பொருட்களை விற்க பகுதியைப் பற்றி) வேளாண் பொருட்களை விற்க பகுதி என்பது உங்களிடம் இருக்கும் எந்த ஒரு வகையான வேளாண் பொருட்களையும் விற்க ஏற்படுத்தப்பட்ட ஒரு தளம் ஆகும், உங்கள் வேளாண் பொருட்களை விற்க பக்கத்தில் இருக்கும் குறியீட்டை (+) தொட்டு உள் சென்று அங்கு தங்களின் பெயர் ஊர் அலைபேசி எண் மற்றும் தங்களிடம் இருக்கும் வேளாண் பொருட்களின் விவரங்களை தந்த பிறகு (சமர்ப்பி) என்பதை அழுத்தி வேலியே வருவதின் மூலம் இந்த செயலியை பயன்படுத்துவோர் அவர்களின் தேவைக்கேற்ப உங்களின் வேளாண் பொருட்களை விற்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
வேளாண் பொருட்களை எவ்வாறு திருத்துவதும்/ நீக்குவதும் எப்படி?
வேளாண் பொருட்களை நீக்குவதும் திருத்துவதும் முறையே வேளாண் பொருட்களை விற்க என்று பக்கத்தில் உங்களின் பெயருக்கு நேராக வலது பக்கத்தில் இருக்கும் குறியிட்டை தொடுவ தன் மூலம் உள் சென்று அங்கு தங்களின் விற்கப்பட்ட வேளாண் பொருட்களை திருத்திக் கொள்ளுங்கள்
Screenshot
Contact
Location:
Nanthagopal B
33/34 arthanareswarar nagar kosalai adi,
Annamalai post thiruvannamalai,
Tiruvannamalai Subdistrict,
Near chandhira
lingam,
Tiruvannamalai District,
Tamil Nadu -
606604
Email:
nanthaananthagopal@gmail.com
Call:
07667817891